Follow @successsavada

Sunday, February 1, 2015

அடுத்த 6 மாதங்களில் 1 இலட்சம் வேலைவாய்ப்பு!! இ-காமர்ஸ் துறை

பெங்களுரூ: 12 பில்லியன் டாலர்கள் பெறுமானமுள்ள மின்வணிகம் என்று அழைக்கப்படும் இ-காமர்ஸ்துறையில் அடுத்த 6 மாதங்களில் 1 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என வல்லுநர்கள்தெரிவித்துள்ளனர். 'சேவை துறையில் துணை நிறுவனங்களாக இருக்கும் ஆட்சேர்ப்பு ஆலோசனை நிறுவனங்கள் இந்ததுறைக்கான ஆட்சேப்பு பணியில் வேகம் கூடியுள்ளது. நாட்டின் ஈ-காமர்ஸ் துறைக்கு அடுத்த 6மாதங்களில் 1 இலட்சம் பேர் தேவைப்படுவார்கள் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது' என்றுஉலகளவில் புகழ் பெற்று விளங்கும் இன்ஹெல்ம் லீடர்ஷிப் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் இந்தியகிளையின் தலைவராக இருக்கும் திரு.பிரசாந்த் நாயர் பிடிஐ-க்கு தெரிவித்தார். E-commerce biz may need to hire 1 lakh people in next 6 months 2009-ம் ஆண்டில் 3.8 பில்லியன் டாலர்களாக இருந்த இந்திய இ-காமர்ஸ் சந்தையின் மதிப்பு, 2013-ம் ஆண்டில் 12.6 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. 'முக்கியமானவர்களை நிலைநிறுத்தி வைத்திருப்பது தான் இ-காமர்ஸ் துறையின் மிகப்பெரிய சவாலாக உள்ளது. உடனடி, குறைந்த கால மற்றும் நீண்ட கால ஊதியம் ஆகிய அனைத்தும் முக்கியமானவை தான், ஆனால் இத்துறையின் பணியாளர்கள் பணத்தையும் மீறி கவனிக்கப்பட வேண்டியவர்களாவர். பிற துறைகளைப் போலல்லாமல், மேம்பாடு, வேலை செய்யும் இடத்தின் கலாச்சாரம், புதுமைக்கு கவனம் செலுத்துல் ஆகியவற்றிற்கும் முன்னுரிமை தர வேண்டியுள்ளது என்று திரு.நாயர் குறிப்பிட்டார். வேகமாக வளர்ந்து வரும் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களால் சில்லறை வணிக நிறுவனங்கள் சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள். எனினும், அவர்களாலும் சமாளித்துக் கொண்டு செயல்பட முடியும். ஆனால் அதற்கு அவர்கள் தங்களுடைய திட்டங்களை புணரமைக்க வேண்டும். மேலும் 2வது மற்றும் 3-வது அடுக்கு நகரங்களை நெருங்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment