Follow @successsavada

Wednesday, August 13, 2014



நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான, காந்தி அமைதி விருது, சாந்தி பிரசாத் பட், 80,க்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சமீபத்தில் வழங்கினார்.
இந்த விருதை, இதற்கு முன், தான்சானியா முன்னாள் அதிபர் ஜூலியஸ் நயராரே, ராமகிருஷ்ணா மடத்தை ஜெர்மனி நாட்டில் நடத்தி வந்த, டாக்டர் ஜெர்ஹார்டு பிஷர், சமூக ஆர்வலர் பாபா ஆம்தே, தென்னாப்ரிக்க விடுதலை போராட்ட வீரரும், அந்நாட்டின் முன்னாள் அதிபருமான நெல்சன் மண்டேலா, பாரதிய வித்யா பவனின், டாக்டர் ஜான் ஹியூம், தென்னாப்ரிக்க ஆர்ச் பிஷப் டெஸ்மாண்ட்டு ஆகியோர் பெற்றுள்ளனர்.
இப்போதைய உத்தரகண்ட் மாநிலம், அப்போது உத்தர பிரதேச மாநிலமாக இருந்த போது, 1934, ஜூன் 23ல், ருத்ரநாத் கோவில் அர்ச்சகர், கங்கா ராம் பட் மற்றும் மகேஷி தேவி தம்பதிக்கு மகனாக பிறந்த சாந்தி பிரசாத் பட், சிறு வயதிலேயே தந்தையை இறந்தார்.தாய் மகேஷியால் வளர்க்கப்பட்ட இவர், வாழ்க்கையை ஓட்டுவதற்காக, கையில் கிடைத்த வேலைகளை எல்லாம் செய்துள்ளார். தன், 22வது வயதில், 'மக்கள் தலைவர்' என போற்றப்படும், ஜெயப்
பிரகாஷ் நாராயணின் சொற்பொழிவை கேட்டுள்ளார். அதில் ஈர்க்கப்பட்ட சாந்தி பிரசாத் பட், கிராம தானம், பூமி தானம் போன்ற இயக்கங்களில் முக்கிய பங்காற்றினார்.
அதன் பின், சர்வோதயா இயக்கத்தில் சேர்ந்து, கிராம மக்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம், தொழில்வாய்ப்பு போன்றவற்றை வழங்கி வந்துள்ளார். அதனால், உத்தர பிரதேசத்தில் இவரின் புகழ் வளர்ந்துள்ளது.இந்நிலையில், வனப்பகுதியில் காய்ந்த மரங்களை வெட்டி, விறகு பொறுக்கும் மக்கள் மீது வனச்சட்டங்கள் பாய்ந்ததால் வெகுண்டெழுந்த இவர், அதற்காக போராடினார்.
உத்தரகண்ட் பகுதிகளில் மலைகளும், ஆறுகளும் அதிகம். அந்த இயற்கை வளத்தை பாதுகாப்பது மரங்கள் தான் என்பதை மக்கள் உணராததால், 1970ல் அங்கு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டு, ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.அதன் பின், சிப்கோ இயக்கத்தை, 1973ல், இவர் துவக்கினார். சிப்கோ என்றால், 'கட்டிப்பிடி' என, அர்த்தம். 'மரங்களை வெட்டி வீழ்த்துவதில் இருந்து காப்பாற்ற, அவற்றை கட்டிப்பிடியுங்கள்' என, இவர் வித்தியாசமாக வழங்கிய அறிவுரை,
உலக அளவில் பெயர் பெற்றுத் தந்தது.'மரங்களை காக்கும், சிப்கோ இயக்கத்தை கட்டிக் காப்பாற்றி வருவதால், சாந்தி பிரசாத் பட்டுக்கு, காந்தி அமைதி விருது வழங்கப்படுகிறது' என, பரிசளிப்பின் போது, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறி பாராட்டினார்.

No comments:

Post a Comment